சாவு ஊர்வலத்திற்கு 20 பேர்.. மதுக்கடைக்கு 1000 பேர்.. மத்திய அரசை விமர்சித்த சிவசேனா..

Only 20 people attend funeral, but 1000 can gather in Liquor shops: Sanjay Raut.

by எஸ். எம். கணபதி, May 9, 2020, 13:52 PM IST

சாவு ஊர்வலத்தில் 20 பேர்தான் போகணுமாம்.. ஆனா, மதுக்கடை வாசலில் 1000 பேர் நிற்கலாமாம்.. இப்படி ட்விட் போட்டு மத்திய அரசை விமர்சித்துள்ளது சிவசேனா கட்சி.
மகாராஷ்டிராவில் பாஜகவுடன் சண்டை போட்டுப் பிரிந்த சிவசேனா, அது முதல் மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்து வருகிறது. தற்போது அம்மாநிலத்தில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா-என்.சி.பி-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.


மத்திய அரசு சமீபத்தில் நாடு முழுவதும் ஊரடங்கை நீட்டித்து அறிவித்த போது, சில கட்டுப்பாடுகளை தளர்த்தியது. அப்போது, மத்திய இணைச் செயலாளர் ஸ்ரீவத்சவா கூறுகையில், உயிரிழந்தவர் இறுதிச் சடங்குகளில் அதிகபட்சம் 20 பேர் மட்டுமே பங்கேற்கலாம். திருமண விழாக்களில் 50 பேர் பங்கேற்கலாம் என்று அறிவித்திருந்தார். மேலும், மதுபானக் கடைகளைத் திறக்கவும் மத்திய அரசு அனுமதி அளித்தது.
இந்நிலையில், சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தனது டிவிட்டர் பக்கத்தில், சாவு ஊர்வலத்தில் அதிகபட்சம் 20 பேர்தான் கலந்து கொள்ள வேண்டும். ஏனெனில், அங்குதான் ஸ்பிரிட்(ஆன்மா) முன்கூட்டியே பிரிந்து போய் விட்டதே. அதே சமயம், மதுக் கடைகள் முன்பு ஆயிரம் பேர் கூடலாம். ஏனெனில், அந்த கடைகளில்தான் ஏராளமான ஸ்பிரிட்(ஆல்கஹால்) இருக்கிறதே... என்று மத்திய அரசைக் கிண்டலடித்துள்ளார்.

You'r reading சாவு ஊர்வலத்திற்கு 20 பேர்.. மதுக்கடைக்கு 1000 பேர்.. மத்திய அரசை விமர்சித்த சிவசேனா.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை