80 சதவீத பாஜகவினர் அத்வானி ஜனாதிபதியாகவே விரும்பினர் - பாஜக தலைவர் அதிரடி

80 சதவீத பாஜகவினர் அத்வானி அவர்களே ஜனாதிபதியாக தேர்வு செய்ய விரும்பினர் என்று நடிகரும், பாஜக மூத்த தலைவருமான சத்ருஹன் சின்ஹா கூறியுள்ளார்.

Shatrughan Sinha, Advani

இது குறித்து சத்ருஹன் சின்ஹா தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “உங்களிடம் சொல்கிறேன், நான் மட்டும் விரும்பவில்லை. சொந்தக் கட்சியில் உள்ள 80 சதவீதம் பேர் அத்வானி அவர்கள் ஜனாதிபதியாக வருவதற்கு விரும்பினர்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அத்வானி எனது நண்பர், தத்துவவாதி, வழிகாட்டி, குரு, தன்னிகற்ற தலைவர் ஆவார். கற்றறிந்த, அனுபவமிக்க, மரியாதைக்குரிய, அனைவரும் விரும்பத்தக்க அத்வானி தான் மதிப்புமிக்க பதவிக்கு தகுதியான நபர். மற்றவர்கள் இதை சொல்வதற்கு தயங்குகிறார்கள். அல்லது தேர்தலில் தங்களுக்கு சீட் வழங்க மறுக்கப்படும் என்று பயப்படுகிறார்கள்.

பாஜகவில் இருந்து நான் விலகப்போவது இல்லை. பாஜகதான் எனது முதல் மற்றும் கடைசி கட்சியாகும். பாஜகவில் இருபெரும் சக்திகளாக இருப்போர்கள்தான் என்னை நிராகரித்து வருகின்றனர். பிரதமர் மோடியை 2 வாரங்களுக்கு முன்பு சந்திக்க நான் முயற்சித்தேன். ஆனால், அவர் எனக்கு நேரம் ஒதுக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.