கடுமையாகிறது ஹெச்1பி விசா முறை: சிக்கலில் ஐடி ஊழியர்கள்!

by Rahini A, Mar 8, 2018, 07:45 AM IST

அமெரிக்காவில் பணியாற்றுவதற்காக வெளிநாட்டவருக்கு வழங்கப்படும் ஹெச்1பி விசா நடைமுறையில் புதிய நிர்வாக மாற்றங்களைக் கொண்டுவர அமெரிக்கக் காங்கிரஸ் செனெட் முடிவு எடுத்துள்ளது.

ஹெச்1பி விசா நிர்வாக நடைமுறையில் ஏற்படவுள்ள புதிய மாற்றங்கள் இதுவரையில் அதிகாரப்பூர்வமாக செயல்பாட்டுக்கு வரவில்லை என்றாலும் விரைவில் நடைமுறைக்கு வரவிருக்கும் விதிமுறைகளால் இந்தியர்களுக்கே அதிக சிக்கல்கள் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஹெச்1பி விசா என்பது அமெரிக்காவில் பணியாற்றுவதற்காக வழங்கப்படும் வெளிநாட்டவருக்கான விசா. இந்தியாவில் அதிகப்படியாக இந்த வகையிலான விசா மூலம் ஐடி ஊழியர்களே அதிகளவில் அமெரிக்கா செல்லும் வாய்ப்பைப் பெறுகின்றனர். அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றப் பின்னர் வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் பணியாற்றுவதற்கான சூழல் இறுக்கமாகியுள்ளது.

மேலும் இன்னும் சில நாள்களில் அறிமுகமாகவிருக்கும் புதிய நடைமுறைகள் சிக்கல்களை மேலும் அதிகமாக்குகிறது.

  1. விசா மட்டும் போதாது: அமெரிக்காவில் பணியாற்ற இந்தியாவிலிருந்து செல்லும் ஒரு ஊழியர் விசா புதுப்பித்தலுடன் ஹெச்1பி நடைமுறைகள் அனைத்தும் பின்பற்றியுள்ளாரா என்பதற்கான அத்தாட்சியும் இனி வரும் காலங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.
  2. விசா காலம் குறைப்பு?- இதுவரையில் அதிகப்பட்சமாக இந்தியாவிலிருந்து செல்லும் ஊழியர் ஒருவர் மூன்று ஆண்டுகள் வரையில் அமெரிக்காவில் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனத்தில் பணியாற்றலாம். ஆனால், இந்த மூன்று ஆண்டு ஒப்பந்தம் என்பது குறைக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.
  3. ஒப்பந்த விவரங்களை சமர்ப்பித்தல்: தற்போது ஹெச்1பி விசாவுக்கு புதிதாகப் பதிவு செய்பராக இருந்தாலும் ஏற்கெனவே இருக்கும் விசாவை புதுப்பிப்பவராக இருந்தாலும் ஒப்பந்த விவரங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற விதிமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
  4. பயண விவரங்கள் சமர்ப்பித்தல்: இந்திய ஊழியர் அமெரிக்காவில் பணிபுரியவிருக்கும் இடத்தில் எப்போது சேருவார், எப்போது ஒப்பந்த காலம் நிறைவுற்று நாடு திரும்புவார் போன்ற பயண விவரங்களையும் முன்கூட்டிய விசா பதியும்போதே சமர்ப்பிக்க வேண்டும்.
  5. மறுப்புக்கு வாய்ப்பு அதிகம்: ட்ரம்ப்பின் ‘அமெரிக்கர்களை மட்டும் பணியமர்த்துவோம்’ என்ற திட்டதை நடைமுறைப்படுத்த அமெரிக்கா முனைப்பு காட்டுவதால் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு ஹெச்1பி விசாக்கள் தரப்படுவதற்கும் புதுப்பிக்கப்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவே கூறப்படுகிறது.

You'r reading கடுமையாகிறது ஹெச்1பி விசா முறை: சிக்கலில் ஐடி ஊழியர்கள்! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை