குஜராத்தில் கொரோனா இறப்பு விகிதம், அதிகமாக இருப்பதைச் சுட்டிக்காட்டி ராகுல்காந்தி, பாஜகவை விமர்சித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு மூன்றரை லட்சத்தை நெருங்கியிருக்கிறது. கொரோனா பலியும் 10 ஆயிரத்தைத் தொட்டுள்ளது. இந்நிலையில், மத்திய அரசின் ஊரடங்கு தளர்வுகள், திட்டமிடாத செயல்கள் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கடுமையாக விமர்சித்து வருகிறார். பாஜகவையும், மோடியையும் விமர்சித்து தினமும் டிவிட்டரில் பதிவிட்டு வருகிறார்.
இன்று(ஜூன்16) அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், குஜராத்தில் கொரோனா இறப்பு விகிதம் 6.25 சதவீதம், மகாராஷ்டிராவில் 3.73 சதவீதம், ராஜஸ்தானில் 2.32 சதவீதம், பஞ்சாப்பில் 2.17 சதவீதம், புதுச்சேரியில் 1.98 சதவீதம், ஜார்கண்டில் 0.5 சதவீதம், சட்டீஸ்கரில் 0,35 சதவீதம் என்று உள்ளது. குஜராத் மாடல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது என்று கிண்டலடித்துள்ளார்.