இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3.66 லட்சமாக உயர்வு..

India Covid-19 toll 12,237, infection tally tops 3.5 lakh.

by எஸ். எம். கணபதி, Jun 18, 2020, 11:46 AM IST

இந்தியாவில் 3 லட்சத்து 66 ஆயிரம் பேருக்கு கொரோனா நோய் பரவியிருக்கிறது. இது வரை 334 பேர் பலியாகியுள்ளனர்.இந்தியாவில் கொரோனா பரவாமல் தடுப்பதற்காகக் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து 5 முறை நீட்டிக்கப்பட்டு, இம்மாதம் 30ம் தேதியுடன் முடிவடைகிறது. எனினும், ரயில், பஸ் போக்குவரத்து தவிர பெரும்பாலான கட்டுப்பாடுகள் அனைத்தும் ஏற்கனவே தளர்த்தப்பட்டு விட்டது.


ஆனால், நாட்டில் தற்போதுதான் தினமும் புதிதாக 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்படுகிறது. நேற்று ஒரே நாளில் 12,881 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 3 லட்சத்து 66,946 ஆக அதிகரித்துள்ளது.

அதே போல், நேற்று கொரோனா நோயாளிகள் 334 பேர் பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து, கொரோனா பலி எண்ணிக்கை 12,237 ஆக அதிகரித்துள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில்தான் ஒரு லட்சத்து 16,952 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. அடுத்து தமிழகத்தில் 50,193 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், 576 பேர் பலியாகியுள்ளனர். 3வது இடத்தில் டெல்லி உள்ளது.

You'r reading இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3.66 லட்சமாக உயர்வு.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை