4 பேரின் உயிரைக் காப்பாற்றிய 7 வயது சிறுவன்!

7 வயது சிறுவன் உடலுறுப்பு தானத்தின் மூலம் 4 பேர்களின் உயிரை காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Oct 16, 2017, 12:05 PM IST

7 வயது சிறுவன் உடலுறுப்பு தானத்தின் மூலம் 4 பேர்களின் உயிரை காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Deyaan Udani

மும்பையை சேர்ந்த 7 வயது சிறுவன் டீயான் உதானி. இவனும், இவனது சகோதரியும் ஒருநாள் உடல் உறுப்பு தானம் பற்றி பள்ளியில் நடந்த சிறப்பு வகுப்பில் கேட்டுள்ளனர். பின்னர், வீடு திரும்பியது உடலுறுப்பு தானம் செய்வது குறித்து அவர்களது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.

அப்போது அவர்கள் தங்களது பெற்றோர்களிடம், “எரிந்து சாம்பலாவதற்கு பதிலாக பிறரது உயிரையாவது காப்பாற்றலாம்” என்று கூறியுள்ளனர். அதற்கு சில நாட்கள் கழித்து விடுமுறைக்காக குடும்பத்தோடு ஆஸ்திரேலியா சென்றுள்ளனர்.

அப்போது டீயானுக்கு தொடர்ச்சியான தலைவலி இருந்துள்ளது. இதனை பரிசோதித்த மருத்துவர்கள் மூளையில் இரத்த உறைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அடுத்த சில வாரங்களிலேயே நிலைமை மோசமடைந்து மூளைச்சாவு ஏற்பட்டுள்ளது.

Deyaan Udani

இதனையடுத்து அவரது பெற்றோர்கள், மஹாராஷ்டிராவில் உள்ள இளம் வயதினருக்கு சிறுவனது உடலுறுப்புகளை தானம் செய்ய முன் வந்துள்ளனர். தற்போது அந்த 7 வயது சிறுவன் நான்கு பேருக்கு வாழ்வளித்து வருகிறான்.

அவனது இதயம் ஒருவருக்கும், சிறுநீரகம் இரண்டு பேருக்கும், கல்லீரல் ஒருவருக்கும் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும், இவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மேற்கொண்ட உடலுறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு பேரணி மூலம் மூவாயிரம் பேர் உடலுறுப்பு தானம் செய்ய முன் வந்துள்ளனர்.

You'r reading 4 பேரின் உயிரைக் காப்பாற்றிய 7 வயது சிறுவன்! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை