இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தைக் கடந்தது. இதில் பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தாண்டியது.நாடு முழுவதும் நேற்று(ஜூலை6) வரை 6 லட்சத்து 97,284 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று 2 லட்சத்து 41,230 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டது. இதில், புதிதாக 22,252 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
இதையடுத்து, கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்தைத் தாண்டியது. தற்போது 7 லட்சத்து 19,665 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருக்கிறது.இதில் 4 லட்சத்து 39,248 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2 லட்சத்து 59,557 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று பலியான 467 பேரையும் சேர்த்து மொத்த உயிரிழப்பு 20,160 ஆக அதிகரித்துள்ளது.மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில்தான் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. அதே போல், மும்பை, சென்னை, டெல்லி ஆகிய நகரங்களில் அதிகமானோருக்கு கொரோனா பாதித்துள்ளது.