“நான் ஒரு மார்க்ஸியவாதி”- தலாய் லாமா

by Rahini A, Mar 11, 2018, 11:32 AM IST

திபெத்திய மத குரு தான் ஒரு மார்க்ஸியவாதி என தன் மார்க்ஸியம் கொள்கை குறித்து விளக்கமளித்துள்ளார்.

திபெத்திய மத குருவான தலாய் லாமா கடந்த 1959-ம் ஆண்டு திபெத்திலிருந்து இந்தியாவுக்குத் தப்பி வந்தார். சுமார் 60 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து அவர் இந்தியா குறித்தும், திபெத் மற்றும் திபெத் மக்கள் குறித்தும் தனது எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து தலாய் லாமா கூறுகையில், "இந்தியாவுக்கு நான் வந்து 60 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதற்காக ஒரு பெரிய நிகழ்ச்சி நடத்தி சொற்பொழிவு கொடுக்க விரும்பவில்லை. திபெத்திய மக்கள் தங்கள் தாய்நாட்டிலிருந்தாலும் சரி வெளிநாடுகளிலிருந்தாலும் திபெத்திய உணர்வு அதிகமாகவே இருக்கும்.

திபெத்தில் 99 சதவிகித மக்கள் புத்த மதத்தைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர். மீதமுள்ள ஒரு சதவிகிதத்தினர் இஸ்லாமியம் மற்றும் கிறிஸ்துவ மதத்தையும் சார்ந்துள்ளனர்.

ஒரு சமூக பொருளாதார நிலையிலிருந்து பார்த்தால் நான் ஒரு மார்க்ஸியவாதி. முதலில் சீன கம்யூனிஸம் பிடித்திருந்தது. ஆனால், மார்க்ஸியம் சம பங்குரிமையை வழங்குகிறது. உழைக்கும் மக்களுக்கானது" எனக் கூறினார்.

You'r reading “நான் ஒரு மார்க்ஸியவாதி”- தலாய் லாமா Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை