உத்தரப்பிரதேச மாநிலத்தில் 40 வயதுள்ள பெண் ஒருவர் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை என்று கூறி உயிருடன் எரிக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8 அன்று பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலம் பலியா மாவட்டத்தில், 20ஆயிரம் ரூபார் பணம் பெற்றததற்காக, கந்தவட்டிக்காரன் ஒருவன், கடனை, வட்டியுடன் கட்டத் தவறியதற்காக இக்கொடூர கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.
சம்பவத்தன்று கந்துவட்டிக்காரர்களான சுத்து சிங் மற்றும் சோனு சிங் ஆகியோர் ஜாஜௌலி கிராமத்தில் வீட்டிற்கு வெளியே வராந்தாவில் தூங்கிக்கொண்டிருந்த பாதிக்கப்பட்ட அப்பெண்ணின் மீது மண்ணெண் ணெய்யை ஊற்றி எரித்துள்ளனர். சுமார் 80 சதவீதம் தீப்புண் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ள அப்பெண்மணி மருத்துவமனையில் மிகவும் ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் மார்ச் 8 அன்று நடந்துள்ளது. மேற்படி கயவர்கள் இருவரையும் தலித்/பழங்குடியினர் வன்கொடுமைத் தடைச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அப்பெண்ணிற்கு ஆகும் மருத்துவச் செலவுகளை அரசாங்கம் முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தீக்காயமடைந்த பெண்ணின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.