பொருளாதாரத்தை மீட்க ஏழைகளுக்கு பணம்.. மோடி அரசுக்கு ராகுல் அட்வைஸ்..

Govt Needs to Spend More, Not Lend More: Rahul Gandhi said.

by எஸ். எம். கணபதி, Aug 26, 2020, 14:55 PM IST

சரிந்து வரும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு கடன் கொடுத்தால் போதாது, ஏழைகளுக்கு பணம் கொடுங்கள் என்று மத்திய அரசுக்கு ராகுல்காந்தி அட்வைஸ் கொடுத்துள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது ட்விட்டர், பேஸ்புக் பக்கங்களில் அடிக்கடி மோடி அரசை விமர்சித்து பதிவுகள் வெளியிட்டு வருகிறார். மேலும், கோவிட்19, பொருளாதார சீரமைப்பு குறித்து பல்வேறு ஆலோசனைகளையும் அவர் பதிவிடுகிறார். ஆனால், ஆளும்கட்சியினர் யாரும் அதை பொருட்படுத்துவதில்லை. மாறாக, பலர் கிண்டல் செய்கின்றனர். ஆனால், ராகுல் தொடர்ந்து தனது கணிப்புகள் மெய்யாகி வருவதை சுட்டிக்காட்டியும், பத்திரிகைச் செய்திகளை மேற்கோள் காட்டியும் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், இன்று அவர் ரிசர்வ் வங்கியின் அறிக்கை ஒன்றை சுட்டிக்காட்டி ஒரு பதிவு போட்டுள்ளார். நுகர்வு மிகவும் குறைந்து விட்டதால், பொருளாதாரம் சீரடைய நீண்ட காலமாகும், ஏழைகள் கடுமையாக பாதிக்கலாம் என்று அந்த செய்தியில் கூறப்பட்டிருக்கிறது.

இது குறித்து ராகுல் வெளியிட்ட பதிவில், நான் பல மாதங்களாக கூறி வந்ததைத்தான் ரிசர்வ் வங்கி இப்போது உறுதி செய்திருக்கிறது. அரசு இப்போது என்ன செய்ய வேண்டும்? அதிக கடன் கொடுப்பதற்குப் பதிலாக நிதியை செலவிடுங்கள். தொழிலதிபர்களுக்கு வரிச் சலுகை அளிப்பதற்கு பதிலாக ஏழைகளுக்கு பணம் கொடுங்கள். நுகர்வுகளை அதிகரிக்கச் செய்தால்தான், பொருளாதாரம் சீரடையும். மீடியாக்களை திசை திருப்புவதால், ஏழைகளுக்கு பலனளிக்கப் போவதில்லை. பொருளாதார சீரழிவும் மறையாது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

You'r reading பொருளாதாரத்தை மீட்க ஏழைகளுக்கு பணம்.. மோடி அரசுக்கு ராகுல் அட்வைஸ்.. Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை