இந்தியாவில் இது வரை கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 33 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இந்நோய்க்குப் பலியானவர் எண்ணிக்கை 60,432 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா நோய் பரவல் தொடர்ந்து வருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா மாநிலங்களில் தொடர்ந்து தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று(ஆக.26) ஒரே நாளில் 75,760 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மொத்தத்தில் இது வரை 33 லட்சத்து 10,235 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இதில் 25 லட்சத்து 23,772 பேர் குணம் அடைந்துள்ளார்கள். இந்நோய்க்கு நேற்று பலியான 1023 பேரையும் சேர்த்தால் இது வரை 60,472 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது நாடு முழுவதும் 7 லட்சத்து 25,951 பேர் சிகிச்சையில் உள்ளனர்.நாடு முழுவதும் நேற்று 8 லட்சத்து 24,998 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளதாகவும், மொத்தம் இது வரை 3 கோடியே 85 லட்சத்து 76,510 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.