காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சோனியா காந்தி, `மோடி அரசு நாங்கள் கொண்டு வந்த மக்கள் நலத் திட்டங்களையும் பலவீனமாக்கிவிட்டார்கள்’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் பேசுகையில், `மோடி அரசுக்கு இந்த நாட்டின் எழை மக்களுக்கு என்ன வேண்டும் என்பது பற்றித் தெரியாது. இன்னும் சொல்லப் போனால், ஏழை எளிய மக்களுக்காக நாங்கள் கொண்டு வந்த மக்கள் நலத் திட்டங்களையும் அவர்கள் புறந்தள்ளுகிறார்கள். அதை மேலும் மழுங்கடிக்கவே செய்கிறார்கள்’ என்று குமுறினார்.
மேலும் அவர் பேசுகையில், `கடந்த நான்கு ஆண்டுகளில் காங்கிரஸை எதை வைத்தெல்லாம் அழிக்கலாம் என்பதில் தீவிரம் காட்டியது மோடி அரசு. ஆனால், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு காங்கிரஸ் இந்த காலத்தில் வீறு கொண்டு எழுந்துள்ளது. காங்கிரஸுக்கு இப்போது சோதனைக் காலம். இந்த நேரத்தில் தான் ராகுல் தலைமை பொறுப்பேற்றுள்ளார். அவரின் தலைமைக்குக் கீழ் காங்கிரஸ் புதிய உச்சங்களைத் தொடும்’ என்று பேசினார்.