பழைய செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி என்ன செய்கிறது?

நாடு முழுவதும் செல்லாதது என்று அறிவிக்கப்பட்டு வங்கிகளில் திரும்பப்பெறப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி என்ன செய்கிறது என்ற தகவல் தெரியவந்துள்ளது.

Mar 19, 2018, 10:16 AM IST

நாடு முழுவதும் செல்லாதது என்று அறிவிக்கப்பட்டு வங்கிகளில் திரும்பப்பெறப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி என்ன செய்கிறது என்ற தகவல் தெரியவந்துள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி அன்று பிரதமர் மோடி பண மதிப்பு நீக்க அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி அப்பொழுது நடைமுறையில் இருந்த 500 மற்றும்1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தார். மேலும், பழைய ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து, புதிய நோட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

இவ்வாறு பழைய புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுக்களில் 99 சதவீதத்துக்கும் மேல் செல்லாத நோட்டுகள் வந்துவிட்டதாக கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரிசர்வ் வங்கி அறிவித்தது.

இந்நிலையில் செல்லாதது என்று அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் வங்கிகளில் சமர்ப்பிக்கப்பட்ட 500, 1000ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி என்ன செய்கிறது என்பது தொடர்பாக ரிசர்வ் வங்கியிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் செய்தி நிறுவனம் ஒன்று தகவல் கோரியிருந்தது.

அதற்கு ரிசர்வ் வங்கி அளித்துள்ள பதிலில், “நாடு முழுவதும் செல் லாததாக அறிவிக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளில் ரூ.15 லட்சத்து28 ஆயிரம் கோடி நோட்டுகள் வங்கிக்குள் வந்துவிட்டன. இந்த நோட்டுக்கள் அனைத்தும் துல்லியமாக எண்ணப்படும் நவீனஎந்திரங்கள் மூலம் எண்ணப்பட்டு வருகின்றன.

அவ்வாறு செல்லாத நோட்டுகளை எண்ணுவதற்காக மிகவும் உயரிய தொழில்நுட்பம் கொண்ட 59 எந்திரங்கள் பல்வேறு ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் வைக்கப்பட்டு எண்ணப்படுகிறது. அவ்வாறு எண்ணி முடிக்கப்பட்ட நோட்டுகள் நவீன எந்திரங்கள் மூலம் மிகச்சிறிய துண்டுகளாக வெட்டப்பட்டு, நசுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த செல்லாத ரூபாய் நோட்டுகள் எதையும் ரிசர்வ் வங்கி மறுசுழற்சி செய்யவில்லை” என்று தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading பழைய செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி என்ன செய்கிறது? Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை