கூட்டம் கூட்டமாக கடக்கும் நபர்கள்.. தெலங்கானாவுக்கு ஒரு அலர்ட்!

by Sasitharan, Sep 15, 2020, 20:52 PM IST

மாவோயிஸ்ட்கள் அதிகம் இருக்கும் மாநிலங்களில் ஒன்று சத்தீஸ்கர். அம்மாநிலத்தில் மாவோயிஸ்ட்களைக் கட்டுப்படுத்த, தனி டீம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், காடுகளில் அவர்கள் இருப்பதை அறிய, காடுகளில் ஆங்காங்கே கேமராக்கள் பொருத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, சில நாட்களுக்கு முன் சத்தீஸ்கரின் சூக்ஸ்மா மாவட்டம் கிஷ்டாரம் பாலோடி வனப்பகுதியில், கூட்டம் கூட்டமாக, கையில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் பல பேர் ஒரு ஆற்றைக் கடக்கின்றனர். இந்தக் காட்சிகள் அங்குப் பதிவாகியுள்ளது.

அதேபோல், இந்தக் காட்சிகளை ட்ரோன் கேமரா மூலம், சத்தீஸ்கர் காவல் அதிகாரிகள் படங்கள் மற்றும் வீடியோக்களைக் பதிவு செய்துள்ளனர். மேலும் மாவோயிஸ்ட் குழு, தெலங்கானா மாநில வனப்பகுதியில் நுழையத் திட்டமிட்டு இருக்கலாம் என்பதால். சத்தீஸ்கர் மாநில காவல்துறை தெலங்கானா மாநில காவல்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளது. இது புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

READ MORE ABOUT :

More India News

அதிகம் படித்தவை