861.90 கோடி ரூபாய்க்கு புதிய நாடாளுமன்றம்... ஏலம் எடுத்த டாடா!

by Sasitharan, Sep 16, 2020, 21:02 PM IST

புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டுவதற்கான டெண்டரை டாடா நிறுவனம் எடுத்துள்ளது. தற்போதைய நாடாளுமன்ற கட்டடம் 1921-ம் ஆண்டில் கட்டத் தொடங்கி 1927-ம் ஆண்டில் ஆங்கிலேய அரசால் கட்டப்பட்டது. இந்தக் கட்டிடத்தில் இட நெருக்கடி பிரச்னை நீண்ட காலமாகவே இருந்து வந்தது. இதனை தீர்க்க, நாடாளுமன்ற கட்டடம் புதிதாக கட்ட தற்போதைய மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக மத்திய பட்ஜெட்டில் ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கவும் செய்தது.

மேலும் புதிய கட்டிடத்துக்கு அனுமதி கோரி மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் உடனடியாக விண்ணப்பிக்கப்பட்டது. இந்த விண்ணப்பத்தை உயர்நிலைக் குழு ஆய்வு செய்தது. மேலும் இதனை எதிர்த்து, 1,292 மனுக்கள் அளிக்கப்பட்டன. அனைத்தையும் ஆய்வு செய்த சுற்றுச்சூழல் துறை உயர்நிலைக் குழு, புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்ட அண்மையில் அனுமதி வழங்கியது. இதற்கிடையே, இந்த புதிய நாடாளுமன்றத்தை கட்டும் ஒப்பந்தத்தை டாடா நிறுவனம் 861.90 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

தற்போதைய நாடாளுமன்றத்தின் அருகிலேயே இந்த புதிய கட்டிடமும் கட்டுவதற்கான பிளான் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், முக்கோண வடிவத்தில், 21 மாதங்களில் முழுப் பணியும் நிறைவடையும்வகையில் டெண்டர் விடப்பட்டுள்ளதாக மத்திய பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.


More India News

அதிகம் படித்தவை