கோவாவில் நவம்பர் மாதம் நடக்க இருந்த உலக திரைப்பட விழா அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.51வது இந்திய சர்வதேச திரைப்பட விழா, கோவாவில் வரும் நவம்பர் மாதம் 20-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் கொரானா ஊரடங்கு காரணமாக இந்த விழாவை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.2021 ஜனவரி 16 முதல் 24-ம் தேதி வரை இந்த விழா நடைபெறும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கோவா முதல்வர் பிரமோத் சவாந்த்துடன் நடத்திய ஆலோசனைக்குப் பின் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.சர்வதேச திரைப்பட விழா வழிகாட்டுதல்கள் மற்றும் விதிமுறைகள் படி, இந்த திரைப்பட விழாவை நடத்தப்பட உள்ளது. இந்த விழா மெய் நிகர் மற்றும் நேரடி நிகழ்ச்சியாக நடத்தப்படும்.
சமீபத்தில் நடந்த சர்வதேச திரைப்பட விழாக்களில் பின்பற்றியபடி, கோவிட் தொடர்பான அனைத்து நெறிமுறைகளும் கடுமையாக அமல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.