ராமரை தொடர்ந்து கிருஷ்ணரின் நிலத்தை மீட்க கோரி வழக்கு... மதுரா நீதி மன்றத்தில் இந்து அமைப்பு தொடர்ந்தது...

case filed to recover krishna jenma boomi at madura..

by Balaji, Sep 26, 2020, 18:28 PM IST

அயோத்தி ராம ஜென்ம பூமி நிலத்தை மீட்கக் கோரி ராம் லாலா விராஜ் மான் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மதுராவில் உள்ள கிருஷ்ண ஜென்ம பூமி 13.37 ஏக்கர் நிலத்தை தங்களிடம் ஒப்படைக்கக் கோரி கிருஷ்ண விராஜ் மான் என்பவர் மதுராவில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தற்பொழுது அந்த நிலம் சாகி ஈத்கா மஜித் என்ற இஸ்லாமிய அமைப்பின் வசம் உள்ளது. ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த இடமான அந்த நிலத்தைச் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து மேல் கட்டுமானம் எழுப்பப்பட்டு இருப்பதாகவும் அதை எங்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்று கூறி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர்கள் ஹரி சங்கர் ஜெயின், விஷ்ணு சங்கர் ஜெயின் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கில் . பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சார்பில் ரஞ்சனா அக்னிகோத்ரி மற்றும் 6 பக்தர்கள் மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.

மதுராவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண ஜென்ம பூமி நிலத்தை உத்தரப்பிரதேச மாநில சன்னி வக்பு போர்டு ஒப்புதலுடன் மஜித் ஈத்கா அறக்கட்டளை கட்டடங்களை எழுப்பியுள்ளது.
1669-1970ம் ஆண்டில் அவுரங்கசீப் கிருஷ்ணர் கோவிலின் ஒரு பகுதியை இடித்து மசூதி எழுப்ப நடவடிக்கை எடுத்ததாக ஜாதுநாத் சர்கார் என்ற வரலாற்று ஆசிரியர் கூறியுள்ளார். அதைச் சான்றாவணம் என்ற ஆதாரமாகக் கொண்டு நிலத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கிருஷ்ண விராஜ்மான் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

You'r reading ராமரை தொடர்ந்து கிருஷ்ணரின் நிலத்தை மீட்க கோரி வழக்கு... மதுரா நீதி மன்றத்தில் இந்து அமைப்பு தொடர்ந்தது... Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை