சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வை ஒத்தி வைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..!

Supreme court refuses to postpone civil services exams

by Balaji, Sep 30, 2020, 17:24 PM IST

வரும் 4ம் தேதி நடைபெற உள்ள சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வை ஒத்தி வைக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

அக்டோபர் 4ஆம் தேதி தேர்வு எழுத முடியாத விண்ணப்பதாரர்களுக்கு வேறொரு நாளில் தேர்வு எழுதிய சந்தர்ப்பம் வழங்கும்படி அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுகள் கடந்த மே மாதம் 31ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரானா ஊரடங்கு காரணமாக இத்தேர்வுகள் அக்டோபர் 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.இந்த நிலையில் சூழ்நிலை இன்னும் சரியாக இல்லை என்பதால் இத் தேர்வை மீண்டும் ஒத்தி வைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. ஆனால் இதை ஏற்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் மறுத்து விட்டனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கான் விலிக்கர் தலைமையிலான அமர்வு தேர்வுக்காக விண்ணப்பித்த அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு ஹால் டிக்கட் கிடைக்கத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.. தேர்வு நடக்கும் மையத்துக்கு அருகிலேயே விண்ணப்பதாரர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான நடைமுறை விதிகள் கடுமையாகப் பின்பற்றப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

சிவில் சர்வீசஸ் தேர்வுகளை மேலும் ஒத்திவைத்தால். அது மற்ற தேர்வுகளைச் சங்கிலித்தொடர் போலப் பாதிக்கும் என்று மத்திய பொதுத் தேர்வு ஆணையம் குறிப்பிட்ட கருத்தை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுகள் நாட்டின் 72 மையங்களில் நடைபெற உள்ளது.இந்தத் தேர்வுக்காக மத்திய சர்வீஸ் கமிஷன் ரூபாய் 9.3 9 கோடி செலவிட்டு இருப்பதாகவும் 6.87 லட்சம் பேர் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து உள்ளதாகவும் மத்திய சர்வீஸ் கமிஷன் தெரிவித்துள்ளது.

You'r reading சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வை ஒத்தி வைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை