ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று 75வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். பிரதமர் நரேந்திர மோடி உள்பட பல்வேறு தலைவர்கள், அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் ஜனாதிபதிக்கு வாழ்த்துக் கூறி வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளதாவது: ஜனாதிபதிக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவருக்கு உள்ள மிகுந்த நுண்ணறிவும், கொள்கைகளை எளிதாகப் புரிந்து கொள்ளும் அறிவாற்றலும் நாட்டிற்குக் கிடைத்த பெரும் சொத்து. எளியவர்களுக்குச் சேவை ஆற்றுவதில் அவர் மிகவும் இரக்கமானவர். அவர் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாகவும் வாழப் பிரார்த்தனை செய்கிறேன்.இவ்வாறு பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். ராம்நாத் கோவிந்த கடந்த 2017ம் ஆண்டு ஜூலையில் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
75வது பிறந்த நாள்.. ஜனாதிபதி கோவிந்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து..
Advertisement