இந்திய - சீன எல்லைப் பகுதியில் ராணுவ பயன்பாட்டுக்கு புதிய தகவல் தொடர்பு அமைப்பை உருவாக்க மத்திய அமைச்சரவையின் பாதுகாப்புக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.நமது நாட்டின் எல்லைப் பகுதியில் தற்போது கடும் பதற்றம் நிலவும் சூழ்நிலையை இந்திய ராணுவம் எப்போதும் முழு விசாரணை நிலையில் இருப்பதற்கு இந்த தகவல் தொடர்பு கட்டமைப்பு துணை புரியும் என்று அமைச்சரவையில் பாதுகாப்புக் குழு கருத்து தெரிவித்துள்ளது.
இந்திய ராணுவத்தின் சிறப்புத் தகவல் தொடர்பு தேவைகளுக்காக ஆர்மி ஸ்டார்ட்டிக் ஸ்விட்ச்டு கம்யூனிகேஷன் நெட்வொர்க்- நான்காவது நிலை. (ASCON PHASE IV) அமைக்கப்பட வேண்டும் என நீண்ட நாட்களாக வலியுறுத்தப்பட்டு வந்தது. இதைச் செயல்படுத்த மத்திய அமைச்சரவையும் பாதுகாப்புக் குழுவும் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தப் பணிகளை5. பணியை நிறைவேற்றும் பொறுப்பு இந்தியன் தளபோன் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் என்ற பொதுத்துறை நிறுவனத்தின் வசம் இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தச் செலவு 7 ஆயிரத்து 796 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மூன்றே ஆண்டுகளில் இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.இந்தியச் சீன எல்லை கட்டுப்பாட்டு கோட்டிக்கு அருகிலுள்ள பகுதிகளில் தகவல் தொடர்புக்கு இந்த அமைப்பு பெரிதும் உதவும் என்று ராணுவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்தத் தகவல் தொடர்பு கட்டமைப்புக்கான அலைவரிசை விரிவுபடுத்தப்பட்டதாக அமையும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தகவல் தொடர்பு கட்டமைப்புக்கான இயந்திரங்களை உற்பத்தி செய்ய உள்ளூர் தொழில் நிறுவனங்கள் பயன்படுத்தப்படும். இதன் மூலம் உள்ளூர் தொழில் நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும்.இது தவிர ராணுவத்துக்குத் தேவையான கையெறி குண்டுகளை உற்பத்தி செய்வதற்காக நாக்பூர் நகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் ஒப்பந்த ஆணையினை பெற்றுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் கீழ் 10 லட்சம் கையெறி குண்டுகளை இந்திய ராணுவத்துக்கு அந்நிறுவனம் தயாரிப்பு வழங்க வேண்டும். புதிய தொழில் நுட்பத்தின் படி இந்த குண்டுகளை அந்த நிறுவனம் தயாரித்து வழங்கும். இரண்டாவது உலகப்போர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட அதே தொழில் நுட்பத்தில் தன் தற்போது கையெறி குண்டுகள் தயாரிக்கப் படுகிறது.இனி புதிய வகை கையெறி குண்டுகள் ராணுவத்துக்குப் பெரிதும் பயன்படும். இதற்கான ஒப்பந்தத் தொகை 409 கோடி என்று ரூபாய் ராணுவ நிபுணர்கள் தெரிவித்தனர்.