ராம்விலாஸ் பஸ்வான் உடலுக்கு ஜனாதிபதி, பிரதமர் நேரில் அஞ்சலி...!

President, P.M, pays tribute to Union Minister RamVilasPaswan.

by எஸ். எம். கணபதி, Oct 9, 2020, 11:52 AM IST

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மற்றும் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர். மத்திய அமைச்சரும், லோக்ஜனசக்தி தலைவருமான ராம்விலாஸ் பஸ்வான் நேற்றிரவு மரணம் அடைந்தார். 74 வயதான அவர், கடந்த சில மாதங்களாகவே உடல்நலம் குன்றியிருந்தார்.

கடந்த மாதம் 11ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்குக் கடந்த 4ம் தேதி இருதய அறுவை சிகிச்சை நடந்தது. அதற்குப் பிறகு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்தார். நேற்றிரவு அவர் மரணம் அடைந்தார்.

இன்று காலையில் பஸ்வான் உடல் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டெல்லியில் உள்ள அவரது வீட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. அங்கு உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங், பாஜக தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>More India News

அதிகம் படித்தவை