நடப்பு கல்வியாண்டில் அமல்படுத்தப்பட உள்ள தேசிய கல்விக் கொள்கை குறித்து கருத்துகள் பல்வேறு தரப்பினரும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பெற்றோர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் தங்களின் கருத்துகளைப் பதிவிட அக்டேபார் 18 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த அவகாசத்தை இம்மாதம் 31ம் வரை நீட்டித்து பல்கலைக்கழக மானியக்குழு (UGC) உத்தரவிட்டுள்ளது.
மேலும் தேசிய கல்விக் கொள்கை குறித்து https://innovateindia.mygov.in/nep2020-citizen/என்ற இணையதளத்தில் கருத்துகளைப் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதோடு, கால அவகாசம் நீட்டிப்பு தொடர்பாகவும், கருத்து தெரிவிப்பதன் அவசியத்தை விளம்பரப்படுத்தவும் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) உத்தரவிட்டுள்ளது.