தேங்காப்பட்டணம் மீன்பிடித்துறைமுகத்தில் கேரள விசைப்படக்குகள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது என மீன்வளத்துறை மண்டல இணை இயக்குனர் அறிவித்துள்ளார்.
குமரி மாவட்டம் தேங்காப்பட்டணத்தில் உள்ள மீன்பிடித்துறைமுகத்தில் உள்ளுர் மீனவர்கள் அதிக அளவில் மீன்பிடிக்க செல்வது வழக்கம் . ஆனால், கேரள மாநிலத்திலிருந்து மீன்பிடி படகுகளளை லாரிகளில் ஏற்றிவந்து ஏராளமானோர் மீன்பிடி தொழிலில் ஈடுபடுகின்றனர். தற்போது கேரளாவில் கொரானா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள மீனவர்கள் இங்கு வருடகால இந்த பகுதியில் கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என மீன்பிடி தொழிலாளர்கள் சங்கதிதினர் குமரி மாவட்ட கலெக்டரிடம் புகார் செய்தனர்.
இந்நிலையில், மீன்வளத்துறை மண்டல இணை இயக்குனர் இளம்வழுதி தேங்காப்பட்டனம் துறைமுக பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். இதை தொடர்ந்து மீனவ பிரதிநிதிகள், பைபர் படகு மீன்பிடி தொழிலாளர் சங்கத்தினர், மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில். மீன் விற்பனை கூடத்தில் இடையூறாக வைக்கப்பட்டுள்ள பெட்டிகளை அகற்ற வேண்டும். வள்ளம் மற்றும் விசைப்படகுகளுக்கு தனித்தனியாக நிறுத்தும் இடங்கள் அமைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை மீனவர்கள் தெரிவித்தனர். பின்னர் பேசிய மண்டல இயக்குனர் தேங்காப்பட்டணம் மீன்பிடிதுறைமுகத்தில் கேரள விசை படகுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மீறி நடந்தால் சம்பந்தப்பட்ட படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்படும் என மீன்வளத்துறை மண்டல இயக்குனர் தெரிவித்தார்.