திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் இன்று முதல் மீண்டும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி...!

From today onwards devotees are allowed again to darshan in Thiruvananthapuram Padmanabhasami Temple

by Balaji, Oct 19, 2020, 16:32 PM IST

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் பத்து நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இக்கோவிலில் பணிபுரியும் தலைமை அர்ச்சகர் உள்பட 12 பேருக்கு 10 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் தரிசனத்திற்குத் தடை விதிக்கப்பட்டு, கோவில் அடைக்கப்பட்டது.ஆனால் கோவில் தந்திரியின் தலைமையில் வழக்கமான பூஜைகள் தடையின்றி நடத்தப்பட்டது வந்தது.

கோவிலின் வளாகத்தைச் சுத்தம் செய்யும் பணிகளும் தொடர்ந்து நடந்து வந்தது. தூய்மை பணிகள் நிறைவடைந்ததையடுத்து, இன்று முதல் மீண்டும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கக் கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்தது .இதன்படி பக்தர்கள் காலை 8 முதல் 11 மணி வரையிலும், மாலை 4 முதல் 6 மணி வரையிலும் மட்டுமே சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

பக்தர்கள் கிழக்கு நடை வழியாக மட்டுமே செல்ல வேண்டும்.தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும். ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியாதவர்கள் கோவிலின் கிழக்கு நடை பகுதியில் தரிசனத்திற்கு முன்பதிவு செய்து கொள்ளலாம் எனக் கோவில் நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, நவராத்திரி விழாவையொட்டி, குமரி மாவட்டத்தில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள சரஸ்வதி தேவியின் விக்ரஹம் , கோவிலின் வெளியே உள்ள கொலு மண்டபத்தில் பூஜைக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு ஏராளமான பக்தர்கள் சரஸ்வதி தேவியைத் தரிசனம் செய்தனர்.

You'r reading திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் இன்று முதல் மீண்டும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி...! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை