முதலில் அப்பா, பிறகு மகன்.. பாடகியை வன்கொடுமை செய்த எம்எல்ஏ!

up mla vijay mishra alleges rapes singer

by Sasitharan, Oct 19, 2020, 19:49 PM IST

உத்தர பிரதேச மாநிலத்தில் நிஷாத் கட்சியின் எம்.எல்.ஏ விஜய் மிஷ்ரா. கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக எம்எல்ஏவாக தேர்வாகி வரும் அவரது வீட்டில், கடந்த 2015ம் ஆண்டு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதற்கு வரும்படி பாடகி ஒருவருக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அதன்படி நிகழ்ச்சிக்கு வந்த அந்தப் பாடகியை எம்எல்ஏ மிஷ்ரா பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதன்பின் மிஸ்ராவின் மகன் மற்றொரு நபரும் பாடகியை வன்கொடுமை செய்து கொடுமைப்படுத்தியுள்ளனர். ஹோட்டல் ஒன்றில் வைத்து எம்எல்ஏ வன்கொடுமை செய்துள்ளார். பிறகு பாடகியை வீட்டில் விடச் சொல்லி அவரின் மகனை அனுப்பியபோது, அவரும் அவரின் உறவினரும் வன்கொடுமை செய்துள்ளனர்.

2015ல் இந்த சம்பவம் நடந்தபோதும், இந்த சம்பவத்தை வெளியில் கூறினால் கொலை செய்துவிடுவதாக எம்எல்ஏ மிரட்டி வந்ததால் வெளியில் கூறவில்லை என்று இதுபற்றி 25 வயது கொண்ட அந்த பாடகி கோபிகஞ்ச் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின்பேரில் 3 பேர் மீதும் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ள போலீஸார், ``எம்.எல்.ஏ. மிஷ்ரா தனது பிரயாக்ராஜ் இல்லத்தில் வைத்தும், வாரணாசியில் உள்ள ஓட்டல் ஒன்றிலும் பாடகியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.மேலும் வீடியோ கால் வழியே பாடகிக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பியுள்ளார். அதற்கான சான்றுகளை பாடகி அளித்து உள்ளார்" என்று கூறியுள்ளனர்.

More India News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அதிகம் படித்தவை