காஷ்மீரை சுற்றி வளைத்த 80 தீவிரவாத குழுக்கள்.. `ராவின் பெரிய அலர்ட்!

80 terrorist groups encircling Kashmir

by Sasitharan, Oct 19, 2020, 20:12 PM IST

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து பிரச்சனை படிப்படியாக ஓய்ந்து வரும் நிலையில், அங்கு பல்வேறு சதிச்செயல்களுக்கு திட்டமிட்டு தீவிரவாதிகள் குழு காஷ்மீருக்குள் நுழைய காத்திருப்பதாக, இந்திய உளவு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கான சதித்திட்டத்தை தீட்டுவது பாகிஸ்தான் ராணுவம்தான் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.

காஷ்மீரின், கரேன் பிரிவுக்கு எதிரே உள்ள ஆத்முகாம், துத்னியல் மற்றும் தஹந்தபானி ஏவுதளங்களில் 80 தீவிரவாதிகள் குழு தங்கியுள்ளது. இந்த நடவடிக்கை, பாகிஸ்தான் ராணுவம் கட்டுப்பாட்டு பகுதிக்கு அருகில் சில மோசமான செயல்களுக்கு திட்டமிட்டுள்ளதை காட்டுகிறது. இங்கு மட்டுமல்ல, ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பாவைச் சேர்ந்த தீவிரவாதிகள் குழு நீலம் பள்ளத்தாக்குக்கு அருகே இந்தியாவுக்குள் ஊடுருவுவதற்கான வாய்ப்பை எதிர்பார்த்து அங்கே தங்கி இருக்கின்றனர்.

பாகிஸ்தானின் காஷ்மீரின் சுஜியன் பகுதியில் உள்ள கிராமங்களில் சுமார் 40 தீவிரவாதிகள் முகாமிட்டுள்ளனர். இவர்கள் ஜெய்ஷ் மற்றும் அல் பத்ரைச் சேர்ந்தவர்கள் என அறியப்படுகிறது. இதேபோல், கிருஷ்ணா காட்டிக்கு எதிரே மாதர்பூர் மற்றும் நட்டார் பகுதிகளில் சுமார் 20 தீவிரவாதிகள், பிஞ்சர் காலிக்கு எதிரே லாஞ்சோட்டில் 35 தீவிரவாதிகள், தக் கானா பகுதியில் உள்ள ராஜவுரி என்ற இடத்தில்

25 தீவிரவாதிகள் முகாம் அமைத்துள்ளனர். இந்த தீவிரவாதிகள் அனைவரும் பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன் இந்தியாவுக்குள் ஊடுருவ திட்டமிட்டுள்ளனர் இந்திய உளவு அமைப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பேசியுள்ள இந்திய ராணுவ அதிகாரி ஒருவர், ``காஷ்மீர் பள்ளத்தாக்கில் 200 தீவிரவாதிகள் முகாம் அமைத்து காத்துக்கிடக்கின்றனர். சுமார் 50-60 தீவிரவாதிகள் இப்போது வடக்கு காஷ்மீரில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இவர்களில் பெரும்பாலோர் வெளிநாட்டினர்" என்று கூறியிருக்கிறார்.

You'r reading காஷ்மீரை சுற்றி வளைத்த 80 தீவிரவாத குழுக்கள்.. `ராவின் பெரிய அலர்ட்! Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை