பீகார் சிக்கல்கள் நிறைந்த மாநிலம். மகா கூட்டணி சார்பில் போட்டியிடும் முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி அனுபவம் இல்லாத நபர் . எனவே அவரால் மாநிலத்தை ஆள முடியாது. ஆகவே அவரது கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டாம் என்று பாஜக கூட்டணி சார்பில் பீகாரில் பிரச்சாரம் செய்யப்படுகிறது.
பீகாரில் தற்போது சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரம் சூடு பிடித்து வருகிறது. பாரதிய ஜனதா கட்சி ஒரு புறம், லலலு பிராத் யாதவின் கட்சி ஒருபுறம். காங்கிரஸ் இன்னொரு புறம். இது தவிர மறைந்த ராம் விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான் என நான்கு முனை போட்டி உள்ளது.
இந்த நிலையில் , லல்லு பிராத் யாதவின் கட்சி சார்பில் அவரது மகன் தேஜஸ்வி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு களமிறங்கியிருக்கிறார். அவர் அனுபவம் இல்லாதவர். அவரிடம் ஆட்சிப் பொறுப்பை கொடுத்ததால் அவரால் சிறப்பான நிர்வாகத்தைக் கொடுக்க முடியாது எனவே அவருக்கு வாக்களிக்க வேண்டாம் என்ற ரீதில் பா. ஜ. க. பிரசாரம் செய்து வருகிறது. இந்தப் பிரச்சாரம் பற்றி லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி, அது பாஜகவின் பொய் பிரச்சாரம். நான் சட்டமன்ற உறுப்பினராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்திருக்கிறேன். தற்போது துணை முதலமைச்சராக இருந்து பணியாற்றி வருகிறேன் இதற்கு மேல் என்ன அனுபவம் வேண்டும். அவர்கள் கூற்றுப்படி நான் அனுபவம் இல்லாத இளைஞன் என்று ஒரு வாதத்துக்கு வைத்துக் கொள்வோம். பாரதிய ஜனதா கட்சி உலகத்திலேயே பெரிய கட்சி. அந்த கட்சி தன்னுடைய முழு பலத்தையும் பயன்படுத்தி என்னை ஏன் தோற்கடிக்க முயற்சி செய்ய வேண்டும்? . மிகப்பெரிய கட்சிக்குப் பீகார் மாநிலத்தில் முதலமைச்சராகச் செயல்பட ஒருத்தர் கூட கிடைக்கவில்லையா.
ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்தவரை ஏன் உங்கள் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் ? பீகார் சட்டமன்றத் தேர்தல் குறித்து எந்த அளவுக்குப் பாரதிய ஜனதா கட்சி பயந்து போயிருக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம் .அனுபவம் இல்லாத இளைஞர் ஒருவனை எதிர்த்துப் போராடுவதற்கு இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உ. பி. முதல்வர் இங்கு வந்து எனக்கு எதிர்த்துப் பிரச்சாரம் செய்ய வேண்டுமா என்ன? என்று பதிலடி கொடுத்துள்ளார்.
மேலும் பதவிக்காகக் கௌரவத்தை விட்டுக் கொடுக்கும் பழக்கம் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துக்கு கிடையாது. பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கத்துடன் தொடர்பு இல்லாமல் இதுவரை எதிர்த்துப் போராடி வந்துள்ள ஒரே கட்சி ராஷ்டிரிய ஜனதா தளம் மட்டும்தான் . நாங்கள் எங்கள் கௌரவத்தை விட்டுக் கொடுத்துவிட்டு பாஜகவுடன் ஒருபோதும் கை கோர்த்ததில்லை. பீகார் மக்கள் பாஜக, நிதிஷ்குமார் ஆகியோரை நிராகரித்து விட்டார்கள். தீவிரப் பிரச்சாரத்தின் மூலம் நிலைமையை மாற்றுவதற்குப் பாரதிய ஜனதாவும், ஐக்கிய ஜனதா தளமும் முயற்சி செய்கின்றது என்றும் தேஜஸ்வி பேசி வருகிறார்.