மே 12-ல் கர்நாடக சட்டமன்றத் தேர்தல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

மே 12-ல் கர்நாடக சட்டமன்றத் தேர்தல்

by Suresh, Mar 27, 2018, 12:56 PM IST


இந்த ஆண்டு மே 12-ஆம் தேதி கர்நாடக சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை மே-15-ஆம் தேதி நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகின்றது. இந்த ஆட்சி மே மாதம் இறுதியில் முடிவடைகிறது.

இந்நிலையில் கர்நாடக சட்டமன்ற தேர்தலை நடத்துவதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வந்தது. அதன்படி, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதேபோல, தேர்தலில் வாக்காளர் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.

இதற்கிடையில், தலைமை தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூருவுக்கு வந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து, இன்று ஓம்பிரகாஷ் ராவத் டெல்லியில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “புகைப்படத்துடன் கூடிய வாக்கு சீட்டு தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பே வாக்காளர்களுக்கு கொடுக்கப்படும்.

வேட்பாளர்களின் செலவினத்தை கண்காணிக்க செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்படுவர். தேர்தல் நன்னடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருகின்றது.

கர்நாடக தேர்தலுக்கும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கும் தொடர்பு இல்லை. கர்நாடக சட்டபேரவைக்கு மே 12-ஆம் தேதி தேர்தல் நடைபெறும்.

வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 17-ஆம் தேதி தொடங்கும். வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 24. வேட்புமனு பரிசீலனை 25-ஆம் தேதி நடைபெறும். ஏப்ரல் 27-ஆம் தேதி வேட்புமனு வாபாஸ் பெற கடைசி நாள் வாக்கு எண்ணிக்கை மே 15-ல் நடைபெறும்” என்றார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading மே 12-ல் கர்நாடக சட்டமன்றத் தேர்தல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை