ஆரோக்கிய சேது... அதிர்ச்சி தகவல்கள்.

ஆரோக்கிய சேது செயலி குறித்து உரிய தகவல்களை அளிக்காத அரசு நிறுவனங்களுக்கு மத்திய தகவல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

by Balaji, Oct 28, 2020, 17:40 PM IST

கொரோனா தொற்று பரவலை கண்காணிக்க மத்திய அரசு, 'ஆரோக்கிய சேது' என்ற செயலியை அறிமுகம் செய்தது. இந்த செயலி, ஒருவரது ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்யப்பட்டிருந்தால், அருகில் வரும் மற்றொரு ஆரோக்கிய சேது பயன்பாட்டாளரின் உடல் நலத்தை பற்றிய அறிவிப்பை நமது அலைபேசியில் பெறலாம் என்று கூறப்பட்டது. அதுமட்டுமின்றி, அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவராக இருந்தால், அது குறித்து நமக்கு எச்சரிக்கை தரும். மேலும் கொரோனா வால் பாதிக்கப்பட்ட அந்த நபர், எங்கெல்லாம் சென்றிருக்கிறார் என்றும், அவர் மூலம் யாருக்கெல்லாம் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் அறிந்து, அவர்களை தனிமைப்படுத்த இந்த செயலி உதவும் என்றும் சொல்லப்பட்டது.

இந்த ஆரோக்கிய சேது செயலி குறித்து குற்றசாட்டுகள் எழுந்த போது அது குறித்து தகவலறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேள்விகள் எழுப்பப்பட்டது. இதையடுத்து https://aarogyasetu.gov.in/ என்ற வலைத்தளம் என்ற டொமைன் பெயருடன் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பது குறித்து எழுத்துப்பூர்வமாக விளக்குமாறு மத்திய தகவல் ஆணையம் சிபிஐஓ, தேசிய தகவல் மையத்தை கேட்டுக்கொண்டது.nதற்போது அந்த கேள்விகளுக்கு மத்திய மின்னியல் அமைச்சகம் அளித்த பதிலில், யாரால் இந்த ஆரோக்கிய சேது செயலி உருவாக்கப்பட்டது என்பது தெரியவில்லை என தெரிவித்துள்ளது.

இதையடுத்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 20-ன் கீழ் உரிய பதில் அளிக்காத சிபிஐஓக்கள், மின்னணு அமைச்சகம், தேசிய தகவல் மையம், நெஜிடி ஆகியவற்றுக்கு ஏன் அபராதம் விதிக்கக்கூடாது என விளக்கம் கேட்டு மத்திய தகவல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் ஆரோக்ய சேது இணையதளம் குறித்து தேசிய தகவல் மையத்திடம் எந்த தகவலும் இல்லை என்பது எப்படி என்பதை விளக்கவும் மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இவ்விவாகரம் குறித்து, அடுத்த மாதம் சிபிஓக்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

More India News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அதிகம் படித்தவை