இது தொடர்பாக இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:வீடுகளுக்குப் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை கட்டணமில்லா தொலைப்பேசி எண் முன்பதிவு செய்து பெறும் நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதில், வாடிக்கையாளர்கள் பதிவு செய்துள்ள தங்கள் மொபைல் எண்ணில் இருந்து தொடர்பு கொண்டு சிலிண்டர் முன்பதிவு செய்யலாம்.
வரும் நவம்பர் 1ஆம் தேதிமுதல் நாடு முழுவதும் புதிதாக ஒரே தொலைப்பேசி எண் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன்படி, 77189 55555 என்ற செல்போன் எண்ணில் 24 மணி நேரமும் சிலிண்டர் முன்பதிவு செய்யலாம்.
அத்துடன், இந்த எண்ணுக்குக் குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலமாகவும் சிலிண்டர் முன்பதிவு செய்யலாம். இப்புதிய தொலைப்பேசி எண் மூலம், வாடிக்கையாளர்கள் ஒரு மாநிலத்தில் இருந்து வேறொரு மாநிலத்துக்கு இடம் பெயர்ந்தாலும் சிலிண்டர் முன்பதிவை எவ்வித சிரமமும் இன்றி செய்யலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.