உத்தரகாண்ட் பாஜக எம்.எல்.ஏ. சுரேந்திரசிங் ஜீனா மரணம் அடைந்தார். அவருக்கு வயது 50.உத்தரகாண்டில் திரிவேந்திரசிங் ரவத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு அல்மோரா மாவட்டம், சால்ட் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனவர் சுரேந்திரசிங் ஜீனா. அவருக்குக் கடந்த வாரம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்குச் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை மரணம் அடைந்தார். உத்தரகாண்டில் 2012ம் ஆண்டு முதல் மூன்று முறை தொடர்ச்சியாகச் சட்டசபைத் தேர்தலில் எம்.எல்.ஏவானவர் சுரேந்திரசிங். கடந்த வாரம் தான் அவரது மனைவி மாரடைப்பால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக எம்எல்ஏ கொரோனா பாதிப்பால் மரணம்..
Advertisement