தீபாவளி தினத்தன்று அயோத்தி நகர் சரயூ நதிக்கரையில் லட்சக்கணக்கான அகல் விளக்குகளை ஏற்றி மக்கள் தீபாவளியை கொண்டாடுவது வழக்கம். கடந்த ஆண்டு இப்படி விளக்கு ஏற்றுவதில் கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என இளைஞர்கள் சிலர் திட்டமிட்டனர். இதையடுத்து கடந்த ஆண்டு 4 லட்சத்து 9 ஆயிரம் விளக்குகள் ஏற்றப்பட்டு அது உலக சாதனை புத்தமான கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றது.
இதே போல இந்தக் ஆண்டும் இந்த சாதனையை தொடர வேண்டும் என்றும் கடந்த ஆண்டு சாதானையை நாமே முறியடிக்க வேண்டும் என்றும் அயோத்தி நகர் இளைஞர்கள் திட்டமிட்டனர். இதன்படி நேற்று சரயு நதிக்கரையில் 6 லட்சத்து 06 ஆயிரத்து 569 எண்ணெய் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டது. இதன் மூலம் இரண்டாவது ஆண்டாக தொடர்ந்து கின்னஸ் சாதனை சான்றிதழ் பெற்றது. தீபாவளியன்று ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அயோத்தி சரயூ நதிக்கரையில் வரிசையாக எண்ணெய் அகல் விளக்குகளை ஏற்றினார்கள். அயோத்தி நகரின் அனைத்து தெருக்களிலும் இந்த விளக்குகள் ஏற்றப்பட்டன இந்த அகல் விளக்குகள் குறைந்த பட்சம் 45 நிமிடம் எரிய வேண்டும் என்று கின்னஸ் நிறுவனம் நிபந்தனை விதித்திருந்தகது.
அகல் விளக்குகள் 45 நிமிடம் தொடர்ந்து எரிவதை உறுதிசெய்ய கின்னஸ் நிறுவனம் டிரோன் விமானங்கள் மூலம் படங்களை எடுத்தது. இந்த படங்களின் மூலம் 6 லட்சத்துக்கும் அதிகமான எண்ணெய் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு அவை 45 நிமிடங்ககளுக்கு மேல் ஒளிர்ந்து கொண்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் இரண்டாவது ஆண்டாக அயோத்தி நகருக்கு கின்னஸ் சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்தச் சான்றிதழ் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.