வடமாநிலங்களில் பனிக்கட்டி மழை..

by எஸ். எம். கணபதி, Nov 16, 2020, 09:52 AM IST

ஜம்மு காஷ்மீர், இமாச்சல், உத்தரகாண்ட் மாநிலங்களில் பனிக்கட்டி மழை பெய்கிறது.
வடமாநிலங்களில் இப்போதே குளிர் வாட்டத் தொடங்கி விட்டது. மேலும், டெல்லி உள்பட பல இடங்களில் மழையும் பெய்து வருகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த வாரம் பனி கொட்டத் தொடங்கியது. இதனால், கட்டிடங்கள், சாலைகள், வாகனங்கள் அனைத்தும் பனிப் போர்வையால் மூடப்பட்டது போல் காட்சியளித்தனர். இமாச்சலப் பிரதேசத்தில் நேற்று முதல் பனி பெய்து வருகிறது.

சிம்லா மாவட்டத்தில் மண்டோல் கிராமம் முழுக்க பனியால் மூடப்பட்டிருக்கிறது. பல இடங்களிலும் பனி கொட்டி, மக்களின் வாழ்க்கையை முடக்கி போட்டுள்ளது. அதே போல், உத்தரகாண்டில் பிரசித்தி பெற்ற ஆன்மீகச் சுற்றுலாதலமான கேதார்நாத்தில் பனிக்கட்டி மழை பெய்தது. அந்த மாநிலத்திலும் பல பகுதிகளில் மக்களை குளிர் வாட்டி வருகிறது.

More India News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அதிகம் படித்தவை