திருமண நிச்சயதார்த்தத்திற்கு வரவழைத்து மது கொடுத்து இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. மணமகன் உட்பட 3 வாலிபர்கள் மீது புகார்

by Nishanth, Nov 16, 2020, 13:51 PM IST

திருமண நிச்சயதார்த்தத்திற்கு வரவழைத்து இளம்பெண்ணுக்கு மது கொடுத்து 3 வாலிபர்கள் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மணமகன் உட்பட 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். மும்பையில் உள்ள அந்தேரி பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மும்பை அந்தேரி பகுதியை சேர்ந்தவர் அவினாஷ் பங்கெகர் (28). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. திருமண நிச்சயதார்த்தம் கடந்த வாரம் அந்தேரி- குர்லா ரோட்டிலுள்ள ஒரு ஒட்டலில் நடந்தது. நிச்சயதார்த்தத்திற்கு அவினாஷ் தனக்கு தெரிந்த ஒரு இளம்பெண்ணையும் அழைத்திருந்தார். நிச்சயதார்த்தம் முடிந்த பின்னர் மது விருந்து நடைபெற்றது. இந்த சமயத்தில் அவினாஷும், அவரது நண்பர்களான சிஷிர் (27) மற்றும் தேஜஸ் (25) ஆகியோர் சேர்ந்து அந்த இளம்பெண்ணுக்கு மது கொடுத்தனர். ஆனால் மது குடிக்க அந்த இளம்பெண் முதலில் மறுத்துவிட்டார்.

3 பேரும் சேர்ந்து கட்டாயப்படுத்தியதை தொடர்ந்து வேறு வழியின்றி அவர் மது அருந்தியுள்ளார். போதை ஏறியதை தொடர்ந்து அந்த இளம்பெண் அங்கேயே மயக்கமடைந்தார். இதையடுத்து மணமகன் அவினாஷ் உட்பட மூன்று பேரும் சேர்ந்து அந்த இளம்பெண்ணை ஓட்டலில் உள்ள ஒரு அறைக்கு கொண்டு சென்று பலாத்காரம் செய்தனர். மறுநாள் காலையில் தான் அந்த இளம்பெண்ணுக்கு மயக்கம் தெளிந்தது. அப்போதுதான், தான் பலாத்காரம் செய்யப்பட்டது அவருக்கு தெரியவந்தது. போலீசில் புகார் செய்தால் தன்னுடைய வாழ்க்கை நாசமாகி விடுமே எனக் கருதி அவர் போலீசில் புகார் செய்யவில்லை. ஆனால் பின்னர் பலாத்காரம் செய்தவர்களில் ஒருவர் அந்த இளம்பெண்ணின் வீட்டினருக்கு போன் செய்து தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த இளம்பெண் அந்தேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை தொடங்கினர். இதுகுறித்து அறிந்த மூன்று பேரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

More Crime News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அதிகம் படித்தவை