இந்தியாவிலேயே முதன்முறையாக குழந்தைகளுக்கான காவல் பிரிவு!

by Loganathan, Nov 16, 2020, 14:46 PM IST

இந்தியாவிலேயே முதன்முறையாக திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் காவல் நிலைய வளாகத்தில் குழந்தைகளுக்கான பிரத்யேக காவல் நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் மற்றும் திருச்சி மாவட்ட காவல்துறை சார்பில் சட்டம் ஒழுங்கு நடவடிக்கையின் கீழ் இந்தியாவிலேயே முதன் முறையாக குழந்தைகள் காவல் நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா முன்னிலையில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் உறுப்பினர் டாக்டர்.ஆர்.ஜி. ஆனந்த் குழந்தைகளுக்கான பிரத்யேக காவல் நிலையத்தை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து பல்வேறு நிலைகளில் பாதிக்கப்பட்டு கல்வி பயின்று வரும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையும் வழங்கினார்.

மேலும், அவர் கூறுகையில் குழந்தைகளுக்கான மனநிலையை அறிவது, அவர்களுக்கு கவுன்சிலிங் அளிப்பது என்பது சவாலானது. சர்வேதேச நீதி மையம் கூட இது தொடர்பான காவல் நிலையம் அமைப்பது முடியாது என்ற பட்சத்தில், இந்தியாவிலேயே முதன்முறையாக திருச்சி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 11 இடங்களில் தொடங்கப்பட உள்ளது எனவும் கூறினார். கொரோனா காலத்தில் குழந்தைகள் திருமணம் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சம்பவங்களை கலைய சம்யோஜனா என்ற டோல் ஃப்ரீ எண் அனைத்து மொழிகளிலும் அறிமுகப்படுத்த பட்டுள்ளது. 18001211283 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட பெண் உட்பட யாரும் அழைக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

You'r reading இந்தியாவிலேயே முதன்முறையாக குழந்தைகளுக்கான காவல் பிரிவு! Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை