உத்திரப் பிரதேச மாநிலத்தில் கடந்த 10 வருடங்களாக 50க்கும் மேற்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்து வந்த அரசு இன்ஜினியரை சிபிஐ இன்று கைது செய்தது. இவர் சிறுமிகளை பலாத்காரம் செய்யும் காட்சிகளை இணையதளத்தில் வெளியிட்டும் பணம் சம்பாதித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக நமது நாட்டில் பெண்கள் மற்றும் சிறுமிளுக்கு எதிரான கொடுமைகள் மிகவும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் தினமும் குறைந்தது 100 சிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு இரையாகின்றனர் என்று தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் கணக்குகள் தெரிவிக்கின்றன. இந்த வருடம் இதில் 21 சதவீதம் அதிகரித்ததுள்ளதும் தெரியவந்துள்ளது.
இது தவிர சிறுமிகளுக்கான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் அதை வீடியோவில் பதிவு செய்து சில ஆபாச இணையதளங்களில் வெளியிட்டு பணம் சம்பாதித்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஒரு அரசு என்ஜினியர் கடந்த 10 வருடங்களாக 50க்கும் மேற்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்து வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக லக்னோவிலுள்ள சிபிஐ அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் நடத்திய விசாரணையில் லக்னோ அருகே உள்ள பாந்தா மாவட்டத்தை சேர்ந்த மாநில நீர்ப்பாசனத் துறை இன்ஜினியர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் கடந்த 10 வருடங்களாக 50க்கும் மேற்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்து வந்தது தெரியவந்தது. இவர் செல்போன் மற்றும் பொம்மைகளை வாங்கித் தருவதாக கூறி சிறுமிகளை பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
இவரிடம் ஏமாந்த சிறுமிகள் 5 முதல் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். இவர்கள் அனைவரும் சித்ரகூட், பாந்தா மற்றும் ஹமிப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மேலும் இவர் சிறுமிகளை பலாத்காரம் செய்யும் காட்சிகளை வீடியோவில் பதிவு செய்து அதை டார்க் நைட் உள்பட சில ஆபாச இணையதளங்களில் வெளியிட்டு லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்து வந்துள்ளார். இவரது வீட்டில் சிபிஐ அதிகாரிகள் நடத்திய சோதனையில் 8 செல்போன்கள், ₹ 8 லட்சம் பணம், லேப்டாப் மற்றும் செக்ஸ் பொம்மைகள் உட்பட எலக்ட்ரானிக் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அவரிடம் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.