விஜய் ரசிகர்களை கவர்ந்த வைரல் புகைப்படம்!

by Sasitharan, Nov 17, 2020, 20:10 PM IST

தமிழகத்தைச் சேர்ந்தவர் வருண் சக்கரவர்த்தி. TNPL தொடர் மூலம் வெளிஉலகிற்கு தெரியவந்த இவர் நடப்பு ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில், முதல் முறை 5 விக்கெட் ஹால் எடுத்து அசத்தினார். மேலும் பேட்ஸ்மேன்கள் ரன் எடுப்பதை தனது கூக்ளி, மற்றும் லெக் ஸ்பின்னால் அசத்தலாக தடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய தொடரில் விளையாட வருணுக்கு வாய்ப்பு கிடைத்தது. எனினும் காயம் காரணமாக அவர் விலகியுள்ளார்.

அதேநேரம் தனது ஆட்டத்திறனால் பெரிதும் கவனிக்கப்பட்ட நபராக மாறியுள்ளார். `மிகச் சிறப்பாக பந்துவீசி என்னை அதிகம் ஈர்த்து விட்டார் வருண்" என்று சச்சின் டெண்டுல்கரே இவரை பாராட்டியுள்ளார். இதற்கிடையே, ஐபிஎல் தொடர் மூலம் பிரபலம் ஆனபோதே, வருண் தான் ஒரு ``தளபதி விஜய்யின் வெறித்தனமான ரசிகர்" என்று கூறினார். மேலும் விஜய் படத்தை தனது கையில் பச்சை குத்தி இருப்பது போன்ற புகைப்படங்களும் வெளியாகி வைரலாகின. இந்நிலையில் இன்று விஜய்யை வருண் சக்கரவர்த்தி சந்தித்துள்ளார். இருவரும் எடுத்துள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சந்திப்பின்போது எடுத்த புகைப்படத்தை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள வருண், ``உள்ள வந்தா பவரா-டி, ஆனா யாரு தளபதி" என்று பாட்டின் வரிகளை பகிர்ந்துள்ளார்.

You'r reading விஜய் ரசிகர்களை கவர்ந்த வைரல் புகைப்படம்! Originally posted on The Subeditor Tamil

More Cricket News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை