ஹனிமூனுக்கு 40 லட்சமா..! அசந்துபோன ரசிகர்கள்..

தமிழ், தெலுங்கு போன்ற திரையுலகில் முக்கிய கதாநாயகியாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் துப்பாக்கி, கோமாளி போன்ற ஹிட் படங்களை கொடுத்துள்ளார். விஜய், சூர்யா போன்ற முக்கிய நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்ற நடிகையாக திகழ்கிறார். நீண்ட காலமாக திருமணத்தை தள்ளி போட்டு வந்த காஜல் இந்த ஊரடங்கில் திருமணத்திற்கு சம்மதம் சொல்லி கடந்த 30ஆம் தேதி தொழில் அதிபருடன் திருமணம் நடந்து முடிந்தது. திருமணத்தில் எடுத்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் திருமணத்திற்கு பிறகு கலர்புல்லான ஆடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். தினமும் ஒரு அழகான சேலையை அணிந்து தந்து கணவருடன் சேர்ந்து போட்டோ எடுத்து அவரது சந்தோஷத்தை பிறருடன் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் ஒரு வாரம் முன்பு காஜல் தனது கணவருடன் மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்றார்.

தினமும் இயற்கையின் அழகு,மற்றும் பல போஸில் கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவு செய்து கலக்கிவருகிறார். அந்த விதத்தில் கடலுக்கு அடியில் இருக்கும் நட்சத்திர ஓட்டலில் தனது கணவருடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது மட்டும் இல்லாமல் காஜல் மற்றும் அவரது கணவர் இருவரும் கடலுக்குள் நீந்தி இயற்கையின் அழகை ரசித்தனர். இருவரும் கடலுக்குள் நீந்துவதை ஜோடியாக படம் பிடித்து இன்ஸ்டாவில் வெளியிட்டார். இதற்கு பல ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். புகைப்படங்கள் யாவும் தீயாய் பரவி வருகிறது. இவரது முழு ஹனிமூனுக்கு சுமார் 40 லட்சம் செலவு செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த செய்தியை அறிந்த மக்கள் ஹனிமூனுக்கு 40 லட்சமா ! என்று வாயடைத்து ஷாக்கில் உள்ளனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds

READ MORE ABOUT :