கழிப்பறையில் நிகழ்ந்த கொடூரம்.. 16 வயது சிறுமியின் வாயை பொத்தி கதற கதற கற்பழித்த கும்பல்..

by Logeswari, Nov 20, 2020, 12:32 PM IST

கழிப்பறையில் வைத்து 16 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள எட்டா கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் கடந்த புதன் கிழமை ஊரில் உள்ள பொது கழிப்பிடத்திற்கு தனது தம்பியை துணைக்கு அழைத்து சென்றுள்ளார். அதே கிராமத்தை சேர்ந்த முன்னாள் ஊர் தலைவர் ராஜிவ் மற்றும் அவரது 2 நண்பர்கள் இதனை கவனித்து மூவரும் கழிப்பறைக்குள் சென்று தாழ்ப்பாளிட்டு கொண்டனர். அப்பொழுது கூச்சலிட்ட சிறுமியை வாயை பொத்தி கை மற்றும் கால்களை கட்டி ஒருவர் பின் ஒருவராக மாறி மாறி சிறுமியை கொடூரமாக கற்பழித்துள்ளனர்.

அது மட்டும் இல்லாமல் சிறுமியிடம் இங்கு நடந்த உண்மையை யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். சிறுமி இரத்த காயத்துடன் அவரது வீட்டிற்கு சென்று பெற்றோர்களிடம் கண்ணீர் விட்டு நடந்தவற்றை கூறியுள்ளார். மிகவும் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் கிராமத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.ஆனால் போலீஸ்தப்பு செய்தவர்கள் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. பிறகு கிராமத்தில் உள்ள மக்கள் முற்றுகையிட்டதால் சிறுமியை பலாத்காரம் செய்த மூவர் மீது சிறுமி சொன்ன குற்றச்சாட்டுகளை வைத்து 3 கட்டமாக வழக்கு பதிவு செய்தனர்.

இதை தொடர்ந்து போலீஸ் சிறுமியை கற்பழித்த ஆகாஷ் மற்றும் அனில்குமாரை கைது செய்துள்ளனர். ஆனால் முக்கிய தலையான ராஜிவ் என்பவர் மட்டும் தலைமறைவு ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. போலீசார் பொறி வைத்து முன்னாள் ஊர் தலைவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இது போல பல சிறுமிகள் உ.பியில் நாளுக்கு நாள் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு வருகின்றனர். ஆனால் தப்பு செய்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்காமல் காலம் இழுத்து கொண்டு செல்கிறது.

More Crime News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை