இணையவழியில் நடைபெற்ற லோக் அதாலத் மூலம் 2.51 வழக்குகள் தீர்வு!

by Loganathan, Nov 24, 2020, 19:08 PM IST

கொரோனா தொற்று காரணமாகக் கடந்த ஜூன் முதல் அக்­டோ­பர் வரை 15 மாநிலங்­க­ளில் ஆன்­லைன் மூலம் நடத்­தப்பட்ட 27 லோக் அதாலத் மூலம் 2.51 லட்­சம் வழக்குகள் முடித்து வைக்­கப்பட்­டன.நீதிமான்­றங்­க­ளில் நிலு­வை­யில் உள்ள வழக்­கு­களை விரைந்து முடிக்க மக்கள் நீதிமன்­றம் எனப்ப­டும் லோக் அதாலத் நடத்தப்படுகிறது . கோவிட் தொற்று காரணமாக இந்த லோக் அதாலத், காணொலி முறை­யில் நடத்­தப்­பட்­டது. இது இ-லோக் அதா­லத் என அழைக்கப்ப­டு­கி­றது.

கடந்த ஜூன் மாதம் முதல் அக்­டோ­பர் வரை 15 மாநிலங்­க­ளில் 27 இ-லோக் அதலாத் நடத்தப்­பட்­டது. மொத்­தம் 4.83 லட்­சம் வழக்­குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இவற்­றில் 2.51 லட்­சம் வழக்­கு­கள் முடித்து வைக்­கப்­பட்­டன. இதன் விளை­வாக, ரூ.1409 கோடி அளவுக்கு தீர்வு தொகை அளிக்­கப்பட்­டது.மேலும், நவம்­பர் மாதத்தில் உத்­த­ரப்பிர­தேசம், உத்­த­ரகாண்ட், தெலுங்­கானா ஆகிய மாநிலங்­க­ளில் நடத்­தப்பட்ட இ-லோக் அதாலத்­தில் 16,651 வழக்­குகள் விசார­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்பட்டன . இதில் 12,686 வழக்­கு­கள் முடித்து வைக்­கப்­பட்­டன. இதன் மூலம் ரூ.107.4 கோடி அளவுக்கு தீர்வு தொகை வழங்­கப்­பட்­டது.

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்