நாக்ரோட்டா என்கவுண்டர்.. தீவிரவாதிகளின் பக்கா பிளான்.. வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

by Sasitharan, Nov 25, 2020, 17:42 PM IST

ஜெய்ஷ் இ முகமது தற்கொலை படைப்பிரிவைச் சேர்ந்த 4 பயங்கரவாதிகள் சமீபத்தில் ஜம்மு காஷ்மீரின் நாக்ரோட்டா பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டனர். என்கவுண்டரின் போது அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், ராக்கெட் லாஞ்சர்கள் மற்றும் வெடி பொருட்கள் இருந்ததாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனா். இதற்கிடையே, இந்த என்கவுண்டர் தொடர்பாக விரிவான விசாரணை நடத்திய போது தீவிரவாதிகளின் உடல்களில் ஜிபிஎஸ் மற்றும் வயர்லெஸ் தொலைதொடர்பு கருவிகள் இருந்ததாகவும், அதனை சோதனைக்கு உட்படுத்தியபோது அவர்கள், பாகிஸ்தானின் ஷகர்காஹ் பகுதியில் செயல்படும் பயங்கரவாத முகாமில் இருந்து, காஷ்மீரின் சாம்பா எல்லைக்குள் நுழைந்து, பின்னர் ஜட்வால் பகுதி வந்ததுள்ளது துல்லியமாக தெரிந்ததாகவும்" பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், தீவிரவாதிகள் இரவில், 30 கிலோமீட்டர் தூரம் நடந்தே பயணித்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்திய பாதுகாப்புப் படையினருக்கு சந்தேகம் ஏற்படாத வகையில், தீவிரவாதிகள் செயல்பட்டிருப்பதாகவும் சாம்பா பிராந்தியத்தில், ராம்கார்ஹ் மற்றும் ஹிராநகர் இடையில் உள்ள மாவா கிராமத்தை அவர்கள் ஊடுருவலுக்கு பயன்படுத்தி பின்னர் நோனத் நீர்நிலையை அடைந்துள்ளனா்" என்ற தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் பதிவு எண்ணை கொண்ட டிரக்கில் தீவிரவாதிகள் பயணம் செய்து சரோர் சுங்கச்சாவடியை கடந்ததாகவும் பின்னா் நர்வால் பை-பாஸ் வழியாக காஷ்மீர் நோக்கி வந்து கொண்டிருந்த போது, அதிகாலை 4:45 மணிக்கு பான் சுங்கச்சாவடி அருகே, பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டு நான்கு பேரையும் சுட்டு கொன்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்