பாஜக பெண் எம்.எல்.ஏ கொரோனாவால் பலி..

by எஸ். எம். கணபதி, Nov 30, 2020, 09:23 AM IST

ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏவுமான கிரண் மகேஸ்வரி, கொரோனாவால் உயிரிழந்தார். அவருக்கு வயது 59.ராஜஸ்தான் மாநில பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான கிரண் மகேஸ்வரிக்குக் கடந்த வாரம் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் டெல்லியை அடுத்துள்ள குருகிராமில் உள்ள மெதந்தா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்குச் சிகிச்சை பலனளிக்காமல் இன்று(நவ.30) காலை மரணம் அடைந்தார்.

கிரண் மகேஸ்வரி, ராஜஸ்தானில் பாஜக ஆட்சியின் போது சுகாதாரம் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர். உதய்ப்பூர் தொகுதியில் ஒரு எம்.பி.யாகவும் இருந்திருக்கிறார். தற்போது அவர் ராஜ்சமந்த் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். கிரண் மகேஸ்வரியின் கணவர் சத்யநாராயணன். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். கிரண் மகேஸ்வரியின் மறைவுக்கு பாஜக மூத்த தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

More India News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை