குஜராத் பா.ஜ. எம்.பி. கொரோனாவுக்கு பலி

by SAM ASIR, Dec 1, 2020, 21:20 PM IST

குஜராத் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அபே பரத்வாஜ் கொரோனாவுக்கு பலியானார். சென்னையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிர் இன்று பிரிந்தது. அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 1954ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2ம் தேதி, உகாண்டா நாட்டில் பரத்வாஜ் பிறந்தார். அங்கு நடந்த குடிமைப் போர் காரணமாக அவரது குடும்பம் 1969ம் ஆண்டு இந்தியா வந்தது. குடும்ப தேவைகளின் காரணமாக 16 வயது முதல் ராஜ்கோட்டில் பத்திரிகையாளராக பணியை தொடங்கினார். 1984ம் ஆண்டு இவருக்குத் திருமணமானது. மனைவியும் மூன்று பிள்ளைகளும் உள்ளனர்.

குஜராத் பார் கவுன்சிலில் 1980ம் ஆண்டு பதிவு செய்து வழக்குரைஞர் தொழிலை ஆரம்பித்தார். அபே பரத்வாஜ் (வயது 66) கடந்த ஜூலை மாதம் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த ஆகஸ்ட் மாதம் ராஜ்கோட்டில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட பிறகு அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். நவம்பர் 25ம் தேதி காங்கிரஸ் மூத்த தலைவரும் பொருளாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான அகமது படேல் உயிரிழந்த நிலையில், குஜராத் மாநிலம் ஒரே வாரத்தில் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை இழந்துள்ளது.

You'r reading குஜராத் பா.ஜ. எம்.பி. கொரோனாவுக்கு பலி Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை