ஜியோமி செல்போன்களுக்கு தடை கோரி பிலிப்ஸ் நிறுவனம் மனு

ஜியோமி நிறுவனத்தின் குறிப்பிட்ட மாடல் செல்போன்களுக்கு மொத்தமாகத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி பிலிப்ஸ் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

by Balaji, Dec 2, 2020, 09:36 AM IST

ஜியோமி நிறுவன செல்போன்களின் எல்இடி தொழில்நுட்பம் உள்ளிட்ட சில அம்சங்களில் தாங்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ள தொழில்நுட்பங்களை சியோமி நிறுவனம் பயன்படுத்தி வருகிறது. எனவே இது காப்புரிமை மீறல் சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றம். காப்புரிமை மீறப்பட்டுள்ளதாக பிலிப்ஸ் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது .

எனவே , ஜியோமி நிறுவனத்தின் ய குறிப்பிட்ட மாடல் செல்போன்களின் விற்பனை மட்டுமல்லாது, உற்பத்தி, விளம்பரம் போன்றவற்றிற்கும் தடை விதிக்குமாறு பிலிப்ஸ் நிறுவனம் தனது மனுவில் கோரியுள்ளது.

மேலும் வெளிநாடுகளில் இருந்து இத்தகைய மாடல் செல்போன்கள் இறக்குமதி செய்யவோ உதிரிப் பாகங்களை இறக்குமதி செய்யவோ அனுமதிக்கக்கூடாது எனச் சுங்க இலாகாவிற்கு உத்தரவிட வேண்டும் என்றும் பிலிப்ஸ் நிறுவனம் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த தில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் 4 வாரங்களுக்குள் சியோமி நிறுவனம் பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜனவரி மாதம் 18-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

You'r reading ஜியோமி செல்போன்களுக்கு தடை கோரி பிலிப்ஸ் நிறுவனம் மனு Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை