மீராகுமாரி ஒரு பலிக்கடா !- பா.ஜ.க பாய்ச்சல்

Jun 24, 2017, 11:27 AM IST

மீராகுமாரி ஒரு பலிக்கடா ''!- பா.ஜ.க பாய்ச்சல்


இந்திய குடியசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை 17ந் தேதி நடைபெறுகிறது. பா.ஜ.க சார்பில் பிஹார் முன்னாள் கவர்னர் ராம்நாத் கோவிந்தும் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மக்களவை சபாநாயகர் மீராகுமாரும் போட்டியிடுகின்றனர். இருவருமே தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மீராகுமாரை தற்போது தேர்தலில் நிறுத்தியது குறித்து கருத்து தெரிவித்துள்ள உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், 'தற்போது மீராகுமாரை வேட்பாளராக நிறுத்தியுள்ள காங்கிரஸ் கட்சி கடந்த 2012ம் ஆண்டு ஏன் அவரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக ஏன் அறிவிக்க்கவில்லை?.தலித் மக்களை பிரித்தாள்வதே காங்கிரஸ் கட்சியின் சூழ்ச்சி '' என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பா.ஜ.கவின் மூத்த தலைவரும் பிஹார் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான சுஷில் குமார் மோடி கூறுகையில், ''காங்கிரஸ் கட்சிக்கு அதிகாரம் இருந்த போது மீராக்குமாரியை ஏன் குடியரசுத் தலைவர் வேட்பாளராக முன்னிறுத்தவில்லை. தற்போது மீராகுமாரியை காங்கிரஸ் கட்சி பலிக்கடாவாக மாற்றியுள்ளது'' எனக் கூறியுள்ளார்.

You'r reading மீராகுமாரி ஒரு பலிக்கடா !- பா.ஜ.க பாய்ச்சல் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை