கொல்கத்தா: அரசியல் காரணமாக விவாகரத்து வரை சென்ற காதல் ஜோடிகள். மேற்குவங்க மாநிலம் பிஷ்ணுபூர் தொகுதி பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர் சவுமித்ரா கான், கடந்த ஜனவரி மாதம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் விலகி பாஜகவில் இணைந்தார். பாஜகவில் இணைந்த உடனே அவருக்கு 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பிஷ்ணுபூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, வெற்றி பெற்று பிஷ்ணுபூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வானார். மேலும் ஒரு ஆஃபராக பாஜகவின் இளைஞரணித் தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.
இதற்கிடையே, அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணியாற்றிய சுஜாதாவிற்கு 2010-ம் ஆண்டு சவுமித்ரா கான் அறிமுகம் கிடைத்தது. காலபோக்கில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் காலித்து வந்த குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை. இருப்பினும், குடும்பத்தை எதிர்த்து 2016-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டார். இன்று முதல் கடந்த சில நாட்கள் வரை இருவரும் ஒருவராக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், இருவருக்கும் இடையே பெரிய விரிசல் ஏற்பட்டது.
இதற்கு காரணமே கடந்த 21-ம் தேதி பாஜகவில் இருந்து விலகிய சவுமித்ரா கான் மனைவி சுஜாதா மொண்டல் கான் திரிணாமுல் காங்கிரஸில் கட்சியில் ஐக்கியமானதுதான். இதனால் கடும் அதிருப்தி அடைந்த சவுமித்ரா கான், மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி தற்போது நோட்டீஸ் அனுப்பி உள்ளார். குடும்பங்களைப் பிரிக்கும் அளவுக்கு மேற்குவங்க அரசியல் மோசமாகியுள்ளது அனைவரது மனதிலும் வேதனை அடைய செய்துள்ளது.