நேபாள நாடாளுமன்றம் கலைப்பு : விளக்கம் அளிக்க பிரதமருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என அந்நாட்டு பிரதமர் சர்மா ஒலிக்கு நேபாள உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

by Balaji, Dec 26, 2020, 20:21 PM IST

நேபாள நாட்டின் நாடாளுமன்றம் கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென கலைக்கப்பட்டது. பிரதமர் ஒலி இதற்கான உத்தரவைப் பிறப்பித்திருந்தார். உட்கட்சிப் பூசல் காரணமாகவே
நாடாளுமன்றத்தை கலைத்தார் என்று தகவல்கள் வெளியாகின.இந்த நிலையில்
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது சட்டவிரோதமானது. கலைக்கப்பட்டதற்கான உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என நேபாள உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் தாக்கல் செய்யப்பட்டது. 13 பேர் இது தொடர்பாக தனித்தனியே வழக்குகளைத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது 13 மனுக்களையும் நீதிபதிகள் ஒன்றாக விசாரித்தனர்.வழக்கை விசாரித்த நீதிபதிகள் நாடாளுமன்றத்தை கலைத்தது ஏன் என்பது குறித்து எழுத்துப்பூர்வமா விளக்கம் அளிக்குமாறு பிரதமர் சர்மா ஒலிக்கு உத்தரவிட்டனர்.

You'r reading நேபாள நாடாளுமன்றம் கலைப்பு : விளக்கம் அளிக்க பிரதமருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை