ஜூலை 3 ல் ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வுகள்

by Balaji, Jan 7, 2021, 19:52 PM IST

ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வுகள் வரும் ஜூலை 3-ம் தேதி நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அகில இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு ஜே.இ.இ. தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில் முதன்மை தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே அட்வான்ஸ்டு தேர்வு எழுத தகுதி பெறுவார்கள்.

முதன்மைத் தேர்வுக்கு பின் நடத்தப்பட வேண்டிய அட்வான்ஸ் தேர்வுகள் கொரோனா தொற்று காரணமாக தள்ளிப் போடப்பட்டு வந்தது. இந்நிலையில் முதன்மை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் ஜூலை 3- ம் தேதி ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வு நடைபெறும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்