மீம் கிரியேட்டர்களுக்கு அடிச்சான் பாரு ஆர்டர்: திடீரென இணையதளத்தில் வைரலான பாஸ்தா!

by Sasitharan, Jan 7, 2021, 19:54 PM IST

தற்போதைய காலகட்டத்தில் இணைய உலகம் எதை எப்போது வைரலாக்கும் என்று கடவுளுக்கே தெரியாத வண்ணம் உள்ளது. விளையாட்டாக பதிவிடப்பட்ட எத்தனையோ புகைப்படங்கள் வைரலாகியுள்ளன. அதேபோல சில புகைப்படங்கள் மீம் டெம்ப்ளேட்டுகளாக சோஷியல் மீடியாவையே தனது கைக்குள் கொண்டு வந்துவிடும். சமீபத்தில், 2001-ம் ஆண்டு வெளியான பிரெண்ட்ஸ் படத்தின் நகைச்சுவைக் காட்சியை மையமாக கொண்டு உலகளவில் #Pray_For_Nesamani என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங் ஆனது.

இதனைபோல், தற்போது, @bayabikomigim என்ற ட்விட்டர் வாசி சமீபத்தில் வேகவைத்த பாஸ்தா புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஒரு தனி பாஸ்தாவும், அதுபோல 3 பாஸ்தாக்களும் உள்ள அந்த புகைப்படம் ஒரு முகத்தை போலவும். ஆ...என சத்தமிடுவது போலவும் இருக்கிறது. தொடர்ந்து, நல்ல மீம் டெம்ப்ளேட் கிடைத்துவிட்டதாக மீம் கிரியேட்டர்ஸ் பயன்படுத்தி பாஸ்தாவை உலகளவில் கொண்டு செல்ல தொடங்கியுள்ளனர்.

More India News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை