சிபிஎஸ்இ வினாத்தாள் லீக் விவகாரம்: முக்கிய குற்றவாளி கைது

Apr 13, 2018, 09:14 AM IST

சிபிஎஸ்இ வினாத்தாள் வாட்ஸ் ஆப்பில் வெளியான விவகாரத்தில் முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு கடந்த மாதம் தொடங்கியது. இதில், கடந்த மாதம் 26ம் தேதி நடைபெற்ற 12ம் வகுப்புக்கான பொருளாதார தேர்வும், கடந்த 28ம் தேதி நடைபெற்ற 10ம் வகுப்புக்கான கணித தேர்வின் வினாத்தாள்களும் தேர்வுகள் நடைபெறுவதற்கு முன்பே சமூக வலைத்தளங்களில் லீக் ஆனது.

இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, 12ம் வகுப்புக்கான மறு தேர்வு நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவித்தது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இமாச்சலப்பிரதேசத்தை சேர்ந்த ராகேஷ் குமார் என்ற பள்ளி ஆசிரியர் ராகேஷ் குமார், கிளார்க் மற்றும் அவரின் உதவியாளர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் ராகேஷ் குமார் குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டார்.
தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக பெண் ஆசிரியை ஒருவரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

மேலும், கேள்வித்தாள் கசிந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியை கைது செய்துள்ளதாக டெல்லி குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading சிபிஎஸ்இ வினாத்தாள் லீக் விவகாரம்: முக்கிய குற்றவாளி கைது Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை